டெல்லி: டெல்லியில் இருந்து கொல்கத்தா செல்லும் ஏர் இந்தியா விமானம் AI2403, தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதை அடுத்து ரத்து செய்யப்பட்டது. விமானம் ஓடுபாதையில் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தபோது தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. பின்னர் புறப்படுதல் ரத்து செய்யப்பட்டது. திங்கட்கிழமை தரையிறங்கும் போது ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றதை அடுத்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
AI2403 ஏர் இந்தியா விமானம் திங்கள்கிழமை மாலை 5:30 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டது. விமானத்தில் 160 பயணிகள் இருந்தனர். இருப்பினும், தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, விமானிகள் நிலையான இயக்க நடைமுறைகளைப் பின்பற்றி புறப்படுவதைக் கைவிட முடிவு செய்ததாக ஏர் இந்தியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

0 #type=(blogger):