Monday, February 16, 2026

மகா சிவராத்திரி: ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் குவிந்த பக்தர்கள்...

SHARE

 


மகா சிவராத்திரியையொட்டி ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் திரளான பக்தர்கள் புனித நீராடினர். கடற்கரை மணலில் சிவலிங்கம் பிடித்து வழிபட்டனர். பலரும் எள்ளுப் பிண்டம் வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். வடமாநில பக்தர்கள் மற்றும் அகோரிகள் என ஆயிரக்கணக்கானோர் வந்திருந்ததால், அக்னிதீர்த்த கடற்கரையில் கூட்ட நெரிசல் அதிகரித்தது.


மாசி மகாசிவராத்திரி திருவிழாவையொட்டி இன்று திரளான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் புனித நீராடி கடற்கரை மணலில் சிவலிங்கம் பிடித்து வழிபாடு செய்தனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் மாசி மகா சிவராத்திரி மற்றும் ஆடி திருக்கல்யாண விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 8ஆம் தேதி, ராமநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள சுவாமி சன்னதி எதிரே உள்ள தங்க கொடிமரத்தில் மீன லக்னத்தில் சிவச்சாரியார்கள் வேத முழங்க கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

SHARE

Author: verified_user

0 #type=(blogger):