Monday, February 23, 2026

“ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகளில் சரி பாதி பெண்களுக்கு வழங்கப்படும்” – தவெக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய்

SHARE

 


வேலூரில் நடந்த தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், “அதிகாரிகளில் சரி பாதி பெண்கள்” உள்ளிட்ட தனது தேர்தல் வாக்குறுதிகளை வழங்கினார்.

வேலூர் மாவட்டம் கொல்லமங்கலம் பகுதியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பேசினார். அப்போது அவர் தனது பாணியில் ஒரு குட்டி ஸ்டோரி சொல்லி தனது பேச்சை தொடங்கினார்.


அவர் சொன்ன குட்டி ஸ்டோரி, “ஆள் நடமாட்டம் அதிகமுள்ள 4 சாலை சந்திப்பில் ஒரு முரட்டு ஜல்லிக்கட்டு காளை நிற்கிறது. அதன் அருகில் யாரும் போக முடியவில்லை. அந்த காளையை அடக்கினால் தான் அந்த இடம் இயல்புக்கு திரும்பும். அந்த காளையை அடக்க நினைத்த ஒரு சிலர், "எங்களுக்கு இல்லாத அனுபவமா?" என அடக்க முயன்றனர். யாராலும் தொட முடியவில்லை.


ஒரு சின்ன பையன் வருகிறான். அந்த பையனையும் கிண்டல் செய்கிறார்கள். அந்த சிறுவனை ஏளனம் செய்தனர். இன்னொரு புறம் பரிதாபப்பட்டனர். சின்ன பையன் எதையும் கேட்காமல் தில்லாக காளையை நோக்கி சென்றான். அந்த பையன் முன்னால் சென்று மறைத்து வைத்திருந்த புல்லு கட்டை கொடுத்து காளையை அடக்கி கூட்டி வந்தான். அடிபட்டு கிடந்த அனுபவசாலிகள் தலையை தொங்கப் போட்டனர்” என குட்டி ஸ்டோரி சொன்ன விஜய், தொடர்ந்து தனது தேர்தல் வாக்குறுதிகளை வழங்கினார்.

SHARE

Author: verified_user

0 #type=(blogger):