திருச்சி அருகே ஆலம்பட்டி புதூரில் இன்று மாலை நடைபெற உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநாட்டிற்கான இறுதிகட்ட ஏற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் 'மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு' திருச்சி அருகே ஆலம்பட்டி புதூரில் சீமான் தலைமையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில், 234 தொகுதிகளின் வேட்பாளர்களையும் சீமான் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.
மாநாட்டில் ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்தவர்களும் தனித்தனியாக அமர்வதற்கு இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதியவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், வெளிநாட்டில் இருந்து வரக்கூடியவர்களுக்கு என தனித்தனி இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்காக குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

0 #type=(blogger):